Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாஜி அமைச்சர் மீது புகார் கொடுத்த டாக்டர் மருத்துவமனையில் ரகளை : தி.மு.க., பிரமுகர் அதிரடி கைது

மாஜி அமைச்சர் மீது புகார் கொடுத்த டாக்டர் மருத்துவமனையில் ரகளை : தி.மு.க., பிரமுகர் அதிரடி கைது

மாஜி அமைச்சர் மீது புகார் கொடுத்த டாக்டர் மருத்துவமனையில் ரகளை : தி.மு.க., பிரமுகர் அதிரடி கைது

மாஜி அமைச்சர் மீது புகார் கொடுத்த டாக்டர் மருத்துவமனையில் ரகளை : தி.மு.க., பிரமுகர் அதிரடி கைது

ADDED : ஆக 27, 2011 11:54 PM


Google News

துறையூர்: முன்னாள் அமைச்சர் நேரு மீது புகார் கொடுத்த டாக்டரின் மருத்துவனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன், அவரது மனைவி மணிமேகலை, 'கலைஞர் அறிவாலயம் கட்ட தங்களுக்கு சொந்தமான, 13 ஆயிரத்து, 920 சதுர அடி நிலத்தை மிரட்டி பறித்துக் கொண்டனர்' என்று மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், துணைமேயர் அன்பழகன், லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜூலு உள்ளிட்ட, 11 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில், தொடர்புடைய முன்னாள் அமைச்சர் நேரு உட்பட எட்டு பேரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நேரு மீது புகார் கொடுத்த டாக்டரின் மருத்துவனையில் புகுந்து, தி.மு.க., பிரமுகர் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தூர் மாரிமுத்து (52). துறையூர் நகர தி.மு.க., 2வது வார்டு செயலாளர். இவரது மனைவி திலகம், துறையூர் நகராட்சி 2வது வார்டு கவுன்சிலராக உள்ளார். முன்னாள் அமைச்சர் நேரு கைதான நாளில், திருச்சிக்கு வந்து நேருவை செந்தூர் மாரிமுத்து பார்த்துள்ளார். பெரும் மன உளைச்சல் அடைந்த அவர், நேராக துறையூரில் உள்ள டாக்டர் சீனிவாசன் அவரது பெயரிலேயே வைத்துள்ள மருத்துவமனைக்குச் கடந்த 25ம் தேதி இரவு சென்றார். அத்துமீறி உள்ளே நுழைந்த அவர், அங்கு பணியில் இருந்த நர்ஸ் ராஜேஸ்வரியிடம் தகாத வார்த்தையில் பேசி, டாக்டர் சீனிவாசனுக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து நர்ஸ் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்பேரில் செந்தூர் மாரிமுத்துவிடம் துறையூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us