
மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி, 'குபீர்' சிரிப்பு பேட்டி: சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மத்தியில், தி.மு.க.,விற்கு ஆதரவான நிலை எழுந்துள்ளது.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி: தேர்தலின் போது, பிரதமர் வேட்பாளர் யார் என்று, கட்சி முடிவெடுக்கும்; அதற்குரிய, நடைமுறைகள் கடைபிடிக்கப்படும்.
தமிழக கவர்னர் ரோசய்யா பேச்சு: மத்திய அரசால் எனக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள நான், அரசியல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன். மாநில மக்களின் நலனுக்காகவும், அமைதியான சூழ்நிலை மற்றும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன்.
அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன் பேட்டி: உலகில் உள்ள தோரியத்தில், 25 சதவீதம் நம் நாட்டில் உள் ளது. இதை வைத்து, 300 ஆண்டுகளுக்கு, மூன்று லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தோரியத்திலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் தொழில் நுட்பம் முழுமை அடையும் நிலையில் உள்ளது. அணு மின்சாரம் தான் நாட்டின் எதிர்காலம்; அதை நாம் கைவிடக் கூடாது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார் பேட்டி: ஊழல் கண்காணிப்பு நிர்வாகம் அனைத்தும், கண்காணிப்பு ஆணையத்தின் வரம்பிற்கு உட்பட்டது என்ற போதிலும், சட்டப்படி அரசின் வழி காட்டுதலின் படியே, ஆணையம் செயல்பட வேண்டியுள் ளது. இது, ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை பாதிக்கிறது.
மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பேட்டி: இந்தியாவில், ஒரு சில துறைகளை தவிர மீதமுள்ள அனைத்து துறைகளிலும், நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பல துறைகளுக்கும், உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதன்படி, நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்காக, பல நாடுகளில் தொழில் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தப்படுகிறது. நேரடி அன்னிய முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக, மேலும் பல கொள்கை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்÷ஷாரி பேட்டி: தனிப்பட்ட முறையில் மன்மோகன் சிங்கின் நேர்மையை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால், அவர் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, தன் கண் முன் தவறுகள் நடக்க அனுமதிக்கக் கூடாது. துரதிருஷ்டவசமாக அது தான் நடக்கிறது.


