ADDED : ஜூலை 28, 2011 12:42 AM
கவுண்டம்பாளையம் : கவுண்டம்பாளையம் அருகே இடையர் பாளையத்தில், வங்கி அதிகாரி வீட்டில், பூட்டை உடைத்து திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இடையர்பாளையம், சிம்சன் நகரில் வசிப்பவர் ராஜா(48). அரசு வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருந்தது. துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


