Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நோன்பு கஞ்சி பொருட்கள் வழங்க அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

நோன்பு கஞ்சி பொருட்கள் வழங்க அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

நோன்பு கஞ்சி பொருட்கள் வழங்க அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

நோன்பு கஞ்சி பொருட்கள் வழங்க அரசுக்கு ஓம்சக்தி சேகர் கோரிக்கை

ADDED : ஜூலை 27, 2011 11:44 PM


Google News

புதுச்சேரி : தமிழகத்தைப் பின்பற்றி, ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கான அரிசி மற்றும் இதர பொருட்களை அரசு சார்பில் வழங்க வேண்டும் என ஓம் சக்தி சேகர் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு அடுத்த வாரம் துவங்க உள்ளது.

இதற்காக தினமும் காலை முதல் மாலை வரை நோன்பு இருந்து, பின்பு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம்.இந்த நோன்பு கஞ்சிக்கான அரிசி மற்றும் இதர பொருட்களை இஸ்லாமியர்களின் நலன் கருதி அரசு சார்பில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இச்செய்தி தமிழக இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதேபோல, புதுச்சேரி அரசும் இஸ்லாமியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நோன்பு கஞ்சிக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை நோன்பு விரதத்திற்கு முன்பாக உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us