Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: 100 ஏக்கர் வாழை நாசம்

குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: 100 ஏக்கர் வாழை நாசம்

குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: 100 ஏக்கர் வாழை நாசம்

குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: 100 ஏக்கர் வாழை நாசம்

ADDED : ஆக 21, 2011 02:36 AM


Google News

ப.வேலூர்: பொத்தனூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வனத்துறையில் கொட்டப்பட்டு வந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், அதனால் ஏற்படும் புகை மூட்டத்தில் அப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழைத்தார்கள் வெம்பி நாசமானது.

ப.வேலூர் அடுத்த பொத்தனூர் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில், பஞ்சாயத்து ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை, தேவராயசமுத்திரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர். அவ்வாறு சேர்ந்த குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 4 மணிக்கு, மர்ம நபர்கள், மலைபோல் குவிந்திருந்த குப்பைக்கு தீ வைத்துள்ளனர். மளமளவென பரவிய தீ, குப்பை முழுவதும் பற்றி எரிந்தது. அதனால், அப்பகுதியில் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.



அந்த புகை மூட்டம், அருகில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை தோப்பிலும் சூழ்ந்தது. புகை சூழ்ந்ததன் காரணமாக, 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள், பிஞ்சு காய்கள் என அனைத்தும் வெம்பி நாசமானது. இந்த புகை மூட்டத்தின் காரணமாக, விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள், விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரமாக போராடி தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து ப.வேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us