/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இண்டஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சிஇண்டஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
இண்டஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
இண்டஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
இண்டஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
ADDED : அக் 02, 2011 09:08 PM
பேரூர் : ஆலாந்துறை இண்டஸ் இன்ஜினியரிங் கல்லூரியில், வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
விழாவுக்கு, கல்லூரி தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்; கல்லூரி இயக்குனர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.
காக்னிஸன்ட் நிறுவன மனித வள மேம்பாட்டு மேலாளர் பிரபுசாரி பேசுகையில்,''நவீன தொழில்நுட்ப யுகத்தில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பெருகி வருகிறது. பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இன்ஜினியரிங் கல்வியின் மேன்மையை உணர்ந்து படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு. அதற்கான உந்து சக்தி மாணவர்களிடமிருந்தே வெளிவர வேண்டும்,''என்றார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், வேலைவாய்ப்பு, நேர்காணல் எதிர்கொள்வது குறித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து, கல்லூரியில் இண்டஸ் வேலைவாய்ப்பு நிறுவனம் எனும் புதிய நிறுவன துவக்கவிழா நடந்தது. இந்நிறுவனத்தின் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தலைவராக மகாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் அறிக்கையை, ரமேஷ்குமார் வாசித்தார். கொடைக்கானல் சர்வதேச மேலாண்மை கல்லூரி தலைவர் சுரேஷ், லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவன செயலாக்கப்பிரிவு தலைவர் நித்யானந்தன், கல்லூரி முதல்வர் ஜான் அலெக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


