/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கொல்லப்பட்ட எலிகள் ரோட்டில் வீச்சு :நோய் பரவும் அபாயம்கொல்லப்பட்ட எலிகள் ரோட்டில் வீச்சு :நோய் பரவும் அபாயம்
கொல்லப்பட்ட எலிகள் ரோட்டில் வீச்சு :நோய் பரவும் அபாயம்
கொல்லப்பட்ட எலிகள் ரோட்டில் வீச்சு :நோய் பரவும் அபாயம்
கொல்லப்பட்ட எலிகள் ரோட்டில் வீச்சு :நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
திருப்பூர் : பொறி வைத்தும், மருந்து வைத்தும் கொல்லப்படும் எலிகளை ரோட்டில் வீசுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளில் புகுந்துவிடும் எலிகள், மூட்டைகளை கடித்து, அதில் உள்ள தானியங்களை உண்பது; உணவு பொருட்களை நாசம் செய்கின்றன; எலிகளின் தொல்லையில் இருந்து விடுபட பலரும், பொறி வைத்து எலிகளை பிடிக்கின்றனர்; மருந்து வைத்தும் எலிகளை கொன்று விடுகின்றனர். கொல்லப்பட்ட எலிகளின் உடலை பலரும், முறையாக அப்புறப்படுத்தாமல் நடுரோட்டில் வீசிவிடுகின்றனர். திருப்பூரில் பல குறுக்கு வீதிகளில், நடுரோடுகளில் எலிகளின் உடல்கள் அவ்வாறு வீசப்படுகின்றன. அவற்றின் மீது வாகனங்கள் ஏறும்போது, அப்பகுதி முழுவதும் எலியின் உடல் கழிவு பரவி துர்நாற்றம் வீசுகிறது; ரோட்டில் செல்வோருக்கு அருவருப்பு ஏற்படுகிறது. எலிகளின் உடலை ஈ, கொசு மொய்ப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.இறந்த எலிகளின் துர்நாற்றத்தால், நாளடைவில் மக்களை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. சாக்கடை, குப்பை என சுகாதாரமற்று காணப்படும் பகுதிகளில், இறந்த எலிகளை ரோட்டில் வீசுவது, நகரின் ஒட்டுமொத்த சுகாதாரத்துக்கும் ஆபத்தாக உள்ளது.இறந்த எலிகளால் கொடிய நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதால், எலிகளை ரோட்டில் வீசுவதை பலரும் கைவிடவேண்டும்; நோய் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.