/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிராமங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்கிராமங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்
கிராமங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்
கிராமங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்
கிராமங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஆக 01, 2011 11:12 PM
திண்டுக்கல் : தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், கிராமியக்கலைக்குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 50 நாட்கள் பிரசார பயணம் நடத்தப்படும். தெருக்கூத்து கரகாட்டம், பொம்மலாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் எய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல்களை, மக்களுக்கு தெரிவிப்பது இதன் நோக்கம். திண்டுக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் நடத்தப்பட்டு செப்டம்பரில் நிறைவு பெறவுள்ளது. திண்டுக்கல்லில், கலைக்குழுவின் விழிப்புணர்வு பிரசார பயணத்தை கலெக்டர் நாகராஜன் தொடங்கிவைத்தார். சுகாதராத்துறை இணை இயக்குனர் ஜெயபால், துணை இயக்குனர் பாலாஜி, மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா பங்கேற்றனர்.