ADDED : அக் 07, 2011 02:17 AM
மதுரை: ''மாநகராட்சி மருத்துவமனை, பாதாளச்சாக்கடை அமைக்க முயற்சிப்பேன்,''
என மதுரை மாநகராட்சி 48 வது வார்டு (ஆத்திகுளம்) தே.மு.தி.க.,வேட்பாளர்
கா.சிங்காரவேலு கூறினார். மாவட்ட கலை, இலக்கிய அணி செயலாளராக உள்ள
சிங்காரவேலு கூறியதாவது: சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வேன். நாகம்மாள்
கோவில் தெரு, ஏஞ்சல் நகர், சிவகாமி நகர் உட்பட பிற பகுதிகளில் குண்டும்,
குழியுமான ரோடுகள் சீரமைக்கப்படும். பாதாளச்சாக்கடை திட்டம்
நிறைவேற்றப்படும். திறந்த வெளி சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல்
பராமரிக்கப்படும். கொசு மருந்துகள் தெளிக்க ஏற்பாடு செய்வேன்.
தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படும். திறந்தவெளிச் சாக்கடைகள்
சீரமைக்கப்படும். ஆத்திகுளம் கண்மாயை சீரமைக்க வலியுறுத்துவேன்.
மக்கள்
உடனுக்குடன் புகார் தெரிவிக்க கலெக்டர், மாநகராட்சி, மின்வாரியம், போலீஸ்
ஸ்டேஷன், மருத்துவமனை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளின் மொபைல், டெலிபோன்
எண்கள் அடங்கிய டைரிகள் வழங்குவேன்.
முதியோர் சிரமத்தை குறைக்க, ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளில்
வினியோகிக்க முயற்சிப்பேன். மாநகராட்சி மருத்துவமனை அமைக்கப்படும்.
என்னிடம் எந்நேரமும் 98655-15396 ல் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


