ADDED : ஜூலை 27, 2011 01:16 AM
புதுச்சேரி : கார்கில் போரில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக கடற்கரைச்சாலையில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு எக்ஸ் சர்வீஸ்மேன் லீக் தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். என்.சி.சி.,யில் பணியாற்றும் ராணுவ அதிகாரிகள், மாணவர்கள், லீக் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஏற்பாடுகளை லீக் நிர்வாகிகள் கார்பொரல் ஜோதிகுமார், ஹவில்தார்கள் கலியபெருமாள், ராமநாதன் ஆகியோர் செய்தனர். கடற்கரைச்சாலையில் உள்ள நினைவிடத்தில் ஜெ.சி.ஐ., மிட்டவுன் தலைவர் சுரேஷ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் ராணுவத்தினர், ஜெ.சி.ஐ., சங்க முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.