ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தால் டில்லி மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரும்படி!
ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தால் டில்லி மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரும்படி!
ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தால் டில்லி மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரும்படி!
ADDED : ஆக 30, 2011 12:14 AM
புதுடில்லி : அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, ராம்லீலா
மைதானத்துக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், டில்லி மெட்ரோ
ரயிலின் வருவாய் அதிகரித்துள்ளது. ஊழலுக்கு எதிராக, ஜன் லோக்பால் மசோதாவை
தாக்கல் செய்யக்கோரி, அன்னா ஹசாரே டில்லி ராம் லீலா மைதானத்தில், 13
நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இவரது போராட்டத்தில் பங்கேற்கவும்,
ஹசாரேவை பார்க்கவும், ஏராளமான பொதுமக்கள் ராம் லீலா மைதானத்தில்
குவிந்தனர். ராம் லீலா மைதானத்திலிருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ளது
மெட்ரோ ரயில் நிலையம். எனவே, ராம் லீலா மைதானத்துக்கு வந்தவர்களில்
பெரும்பாலோர், மெட்ரோ ரயிலை தான் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம், மெட்ரோ
ரயில் பயணிகளின் எண்ணிக்கை, இந்த காலகட்டத்தில் 40 சதவீதம் அதிகரித்ததாக,
மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக, ராம்லீலா மைதான மெட்ரோ ரயில் நிலையத்திற்கு, 40 முதல் 45 ஆயிரம்
பயணிகள் வந்து செல்வார்கள். ஹசாரே உண்ணாவிரத காலத்தில், இந்த ரயில்
நிலையத்திற்கு, 62 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அதிக பட்சமாக, 21ம் தேதி 78
ஆயிரம் பேர் வந்துள்ளனர். கூடுதல் பயணிகள் மூலம், மெட்ரோ ரயில்
நிர்வாகத்திற்கு கிடைத்த வருமானம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.


