/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேசிய அஞ்சல் தினத்தில் கடிதம் எழுதும் போட்டிதேசிய அஞ்சல் தினத்தில் கடிதம் எழுதும் போட்டி
தேசிய அஞ்சல் தினத்தில் கடிதம் எழுதும் போட்டி
தேசிய அஞ்சல் தினத்தில் கடிதம் எழுதும் போட்டி
தேசிய அஞ்சல் தினத்தில் கடிதம் எழுதும் போட்டி
ADDED : அக் 12, 2011 02:59 AM
ஊட்டி : ஊட்டி அருகே தூனேரி அகலார் குருகுலம் பள்ளியில் 'தேசிய அஞ்சல்
தினம் ' கொண்டாடப்பட்டு, மாணவர்களிடையே கடிதம் எழுதும் போட்டி
நடத்தப்பட்டது.இப்போட்டியை துவக்கி வைத்து பள்ளி முதல்வர் வாசுகி அர்ஜூணன்
பேசுகையில், ''முந்தைய தலைமுறையுடன் கடிதம் எழுதும் பழக்கம் முடிந்து
விட்டது.
அன்றைய மனிதர்கள் கடிதம் மூலமே பல செய்திகளை அறிந்து கொண்டனர்.
செய்திகளை பெறுவதற்கு பல நாட்கள் அல்லது பல மாதங்கள் கூட ஆனது.
ஒருவரிடமிருந்து கடிதம் எப்போது வரும் என எதிர்பார்த்து கொண்டும், பதில்
கடிதம் சென்று சேர்ந்ததா என் அறியாமலும் வாழ்ந்த காலம் போய்விட்டது. இன்றைய
சூழ்நிலை ஒருவருக்கு செய்திகளை கூற வேண்டும் எனில் அது கண் சிமிட்டும்
நேரத்தில் முடிந்து விடும். தொலை பேசி, மொபைல்போன், இன்டெர்நெட் மூலம் வெகு
விரைவில் செய்திகள் மக்களை சென்றடைகின்றன. ஆதலால் நம்மிடம் கடிதம் எழுதும்
பழக்கம் அறவே இல்லாமல் போனது.இந்நிலை, நீடித்தால் கடிதம் எழுதும் முறையை
வருங்கால சந்ததியினர் அறியாமல் போகக்கூடும். இந்நிலையை மாற்ற மாணவர்களிடையே
கடிதம் எழுதும் பழக்கம், அஞ்சலகத்தின் சேவையை அறிய செய்ய இப்போட்டி
நடத்தபடுகிறது,'' என்றார். போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு
கடிதம் எழுதினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


