/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்
மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்
மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்
மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்
ஸ்ரீவில்லிபுத்தூர் : 'மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்' என அ.தி.மு.க., ஸ்ரீவி.,தொகுதி செயலாளரும் ,அக்கட்சி வேட்பாளருமான சிந்து எம்.முருகன் தெரிவித்தார்.
அனைத்து கிராமங்களுக்கும் தார், சிமென்ட் சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். படித்த இளைஞர்கள் தங்கள் பகுதியிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுய தொழில் தொடங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு நிதி உதவி அளித்து, கல்வி கற்க அவர்களின் பாதுகாவலனாக செயல்படுவேன். இப்பகுதி கிராமங்களில் கால்நடை பராமரிப்பிற்காக புதிய கால் நடை மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிக்கு வர வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் ,பஸ் போக்குவரத்தே இல்லாத பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் கர்ப்பிணிகள், மக்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க மல்லியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகாலமாக எவ்வித வசதியும் இல்லாமல் பின்தங்கி இருண்ட நிலையில், இருந்த இப்பகுதி மக்களுக்கு சாதி, மத பேதமின்றி அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசின் விலையில்லாத நலத்திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கும் வீடு தேடி கிடைக்கும் வகையில் செய்வேன்,என்றார் .


