/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தமிழக அமைச்சர்கள் பிரசாரம்: இந்திராநகர் தொகுதியில் அனல்தமிழக அமைச்சர்கள் பிரசாரம்: இந்திராநகர் தொகுதியில் அனல்
தமிழக அமைச்சர்கள் பிரசாரம்: இந்திராநகர் தொகுதியில் அனல்
தமிழக அமைச்சர்கள் பிரசாரம்: இந்திராநகர் தொகுதியில் அனல்
தமிழக அமைச்சர்கள் பிரசாரம்: இந்திராநகர் தொகுதியில் அனல்
ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரனுக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் நேற்று ஓட்டு சேகரித்தனர்.
இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில், பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க.,வினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி, வாக்காளர்கள் தெரிவிக்கும் குறைகளை பொறுமையாக கேட்டு, வாக்குறுதிகளை அள்ளி வீசி படுசுறுசுறுப்பாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். புதுச்சேரி அ.தி.மு.க., வினருடன், தமிழக அமைச்சர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதால் அனல் பறக்கிறது.
திலாஸ்பேட்டை வார்டுக்கு உட்பட்ட ஞானு தியாகு நகர், தேரோடும் வீதி, ஆனந்தா நகர் பகுதிகளில் அ.தி.மு.க.,வேட்பாளர் பாஸ்கரனுக்கு ஆதரவாக தமிழக எம்.பி., செம்மலை, தமிழக அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், சம்பத் ஆகியோர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., ஜெ, பேரவை செயலாளரும், திலாஸ்பேட்டை வார்டு பொறுப்பாளருமான ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் புரு÷ஷாத்தம்மன், பெரியசாமி, பாஸ்கர், அவைத் தலைவர் பாண்டுரங்கன், நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.


