Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாஜியின் உதவியாளர் மீது வழக்கு மேல் வழக்கு பதிவு :பூச்சாண்டி காட்டும் போலீஸ்

மாஜியின் உதவியாளர் மீது வழக்கு மேல் வழக்கு பதிவு :பூச்சாண்டி காட்டும் போலீஸ்

மாஜியின் உதவியாளர் மீது வழக்கு மேல் வழக்கு பதிவு :பூச்சாண்டி காட்டும் போலீஸ்

மாஜியின் உதவியாளர் மீது வழக்கு மேல் வழக்கு பதிவு :பூச்சாண்டி காட்டும் போலீஸ்

ADDED : செப் 06, 2011 01:26 AM


Google News
சேலம்: மாஜி அமைச்சரின் உதவியாளரும், உறவினருமான கவுசிகபூபதி மீது, சேலம் மாநகர போலீஸில், இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்யாமல், போலீஸார் போக்கு காட்டி வருகின்றனர். மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளரும், உறவினருமான கவுசிகபூபதி மீது, இதுவரை போலீஸார், நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால், அவரை கைது செய்யாமல் மாநகர போலீஸார் போக்குகாட்டி வருகின்றனர். சேலம் அங்கம்மாள் காலனி நிலவிவகாரம், பிரிமியர் ரோலர் மில் அபகரிப்பு வழக்குகளில், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, இவர் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன் ராஜ் என்பவரின் நிலத்தை மிரட்டி வாங்கியதாக, ஐந்து பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இவர் ஆகஸ்ட் 18ல் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் சரணடைந்திருக்க வேண்டும். ஆனால், சரண் அடையவில்லை. அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 51 நாட்களுக்கு மேல் ஆகியும், மாநகர போலீஸாரால் அவரை கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், செப்டம்பர் 4ல் சேலம், கோயமுத்தூர் ஜூவல்லரி உரிமையாளர் பிரேம்நாத் அளித்த புகாரின் பேரில், இவர் மீது, ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும், போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சேலம், கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், சந்திரசேகர் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக, மாஜி எம்.எல்.ஏ., ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. போலீஸார் கைது செய்யும் முன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றதால், அவரை போலீஸாரால் கைது செய்ய இயவில்லை. நேற்று முன்தினம் வரை சேலத்தில் முகாமிட்டிருந்த, மாஜி எம்.எல்.ஏ., ராஜா, நேற்று அதிகாலையில் தலைமறைவாகி விட்டார். அங்கம்மாள் காலனி வழக்கில் வி.ஐ.பி., குற்றவாளிகளை கோட்டை விட்டது போல், மாஜி எம்.எல்.ஏ., ராஜாவை கைது செய்யாமல் கோட்டை விட்டுள்ளதன் மூலம், சேலம் மாநகர போலீஸில், அரசியல்வாதிகளின் விசுவாசிகள் இன்னும் இருப்பதையே காட்டுகிறது, என்று நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us