ADDED : அக் 07, 2011 10:33 PM
தளவாய்புரம் : ''குடிநீர் விநியோகத்தை சீராக்குவேன் ,''என, செட்டியார்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க., தலைவர் வேட்பாளர் வைஜெயந்திமாலா கூறினார்.
செட்டியார்பட்டி பேரூராட்சி 5,9 11வது வார்டுகளில் பிரசாரம் செய்த அவரை மக்கள் வரவேற்றனர். வாறுகால்களில் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்ய வேண்டும்.குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகறை களைய வேண்டும்.குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர். அப்போது அவர் பேசியதாவது: 5வது வார்டில் பெண்களுக்கான கழிப்பிடத்தை திறக்க ஏற்பாடு செய்வேன்.விரிவாக்க பகுதிகளில் ரோடு,தண்ணீர்,மின் விளக்கு வசதிசெய்து தரப்படும். 10வது வார்டில் குடிநீர் விநியோகத்தை சீராக்கும் வகையில், கூடுதலான கேட் வால்வுகள் அமைக்கப்படும்.தெருக்களில் குப்பை மற்றும் வாறுகால்களில் தண்ணீர் தேங்கவிடாமல் சுத்தம் செய்யப்படும். மண்ரோடாக உள்ள தெருக்கள் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும்,என்றார். கவுன்சிலர் வேட்பாளர்கள் உதயசூரியன், முப்பிடாதி, பாண்டிமாதேவி. நகர செயலாளர் தங்கச்சாமி, நிர்வாகி கனிராஜா,முகேஷ்குமார், மணி, ரத்தீஷ் குமார். பவுன்ராஜ்,அய்யாச்சாமி,பெரியசாமி,தொந்தியப்பன்,டெய்லர் குருசாமி,பால்ராஜ்,பொன்ராஜ்,சின்னதம்பி கலந்து கொண்டனர்.


