ADDED : அக் 05, 2011 01:13 AM
குளித்தலை: குளித்தலை அருகே அய்யர்மலையில் செயல்பட்டு வரும்
அரசுக்கல்லூரியில் தோகமலை வனச்சரகம் மற்றும் கல்லூரி என்.எஸ்.எஸ்., மூலம்
மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.கல்லூரி முதல்வர் ராஜூ தலைமை வகித்தார்.
கல்லூரி பேராசிரியர்கள் கோவிந்தராஜ் சுப்பிரமணியன், டோமினிக், பிரச்சன் னா
முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் வேப்பமரம், புளியமரம், மலைவேம்பு,
தேக்குமரம் சுமார் 300 மரக்கன்றுகள் தோகமலை வனச்சரக அலுவலர் ரேஞ்சர்
கனரத்தினம் நட்டார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செங்குட்டுவன், ஜெகதீசன்
செய்திருந்தனர்.


