/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர் வாரம் துவக்கம்; பரதநாட்டியம் நிகழ்ச்சிநெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர் வாரம் துவக்கம்; பரதநாட்டியம் நிகழ்ச்சி
நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர் வாரம் துவக்கம்; பரதநாட்டியம் நிகழ்ச்சி
நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர் வாரம் துவக்கம்; பரதநாட்டியம் நிகழ்ச்சி
நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர் வாரம் துவக்கம்; பரதநாட்டியம் நிகழ்ச்சி
ADDED : செப் 16, 2011 02:01 AM
திருநெல்வேலி : நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர் வாரம் துவக்க விழா மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர் வாரம் துவக்க விழாவில் இந்திரா கிருஷ்ணமூர்த்தி இறைவணக்கம் பாடினார். லோகா சுப்பிரமணியம், திருவிளக்கு ஏற்றிவைத்தார். நெல்லை சங்கீத சபா தலைவர் வேலாயுதம் வரவேற்றார். 65 ஆண்டுகளில் சங்கீத சபா பணிகள் குறித்து செயலாளர் நடேசன் பேசினார். நன்கொடையாளர்கள் சாரதா கண்ணன், ராம்ஜி, ராஜம் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ்.ஆர்.ராஜகுமார், பாலசுப்பிரமணியன், ஏ.சங்கரன், சோமசுந்தரம்பிள்ளை, ஞானசம்பந்தம் கலாலயம் வீணை சரஸ்வதி, தளவாய் ஹவுஸ் சண்முகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகராட்சி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். வக்கீல் வைத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நன்கொடையாளர்களை பொன்னாடை அணிவித்தும், நினைவுக் கேடயம் வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர். இணைச் செயலாளர் தளவாய் ராமசாமி நன்றி கூறினார். தொடர்ந்து மாம்பலம் எம்.கே.எஸ்.சிவா குழுவினரின் நாதஸ்வரம் இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டு ரசித்தனர். நன்கொடையாளர் வாரத்தில் நேற்று திருவனந்தபுரம் மிதிலாலயா நடன அகாடமி மைதிலி குழுவினரின் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி நடனங்கள் நடந்தது. இன்று (16ம் தேதி) மதுரை மணிஐயரின் மருமகன் சென்னை பத்மபூஷன் டி.வி.சங்கரநாராயணன் இசை நிகழ்ச்சியும், 17ம் தேதி தியாகராஜ சுவாமிகளின் சரித்திரம் குறித்து விசாகா ஹரியின் சங்கீத உபன்யாசமும், 18ம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த கர்நாடக இசை, மெல்லிசையில் பிரபலமான அஸ்வதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.


