Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை தோட்டங்களை அழித்து கட்டடம் கட்ட தடை

தேயிலை தோட்டங்களை அழித்து கட்டடம் கட்ட தடை

தேயிலை தோட்டங்களை அழித்து கட்டடம் கட்ட தடை

தேயிலை தோட்டங்களை அழித்து கட்டடம் கட்ட தடை

ADDED : ஜூலை 25, 2011 11:03 PM


Google News

குன்னூர் : 'நீலகிரியில் தேயிலை தோட்டங்களை மையப்படுத்தி ரியல் எஸ்டேட் தொழில், தோட்டங்களுக்கு இடையே கட்டடம் கட்டும் செயலை கட்டுப்படுத்த வேண்டும்,' என உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்கள் ரிசார்ட், காட்டேஜ், பங்களாவாக மாறி வருகின்றன. இதனை தொடர்ந்து, குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக செயலருக்கு அனுப்பிய மனுவில்,'நீலகிரியின் மிக முக்கிய தொழிலாக விளங்கும் தேயிலை சாகுபடி பல லட்சம் பேரின் வாழ்வாதாரமாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் கட்டுமானப் பணி மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து அனுமதி வழங்குவதால் நிலச்சரிவு அபாயம் ஏற்படுகிறது.தேயிலை தோட்டங்களை ரியல் எஸ்டேட் தொழிலாக மாற்ற தடை விதிக்க வேண்டும்,' எனக் கூறியிருந்தார். இதன்பின் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், மாநில நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலகம் சார்பில், நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டும்; விதிமீறி பணி நடந்தால் கண்காணித்து தடுக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us