/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"மனுக்களை ஜீவனாக கருதி நடவடிக்கை வேண்டும்'"மனுக்களை ஜீவனாக கருதி நடவடிக்கை வேண்டும்'
"மனுக்களை ஜீவனாக கருதி நடவடிக்கை வேண்டும்'
"மனுக்களை ஜீவனாக கருதி நடவடிக்கை வேண்டும்'
"மனுக்களை ஜீவனாக கருதி நடவடிக்கை வேண்டும்'
ADDED : ஜூலை 28, 2011 12:49 AM
பொள்ளாச்சி : 'மனுக்களை வெறும் காகிதமாக நினைக்காமல் உயிருள்ள ஜீவனாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., ஜெயராமன் வேண்டுகோள் விடுத்தார்.
பொள்ளாச்சி, திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி தலைமை வகித்தார். முகாமில், உடுமலை எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசியதாவது: மனு கொடுப்பவர்கள் எல்லோரும் படித்தவர்கள் அல்ல. படிக்காதவர்களும், ஏழைகளும் மனு கொடுக்கிறார்கள். அதிகாரிகள் அந்த மனுக்களை வெறும் காகிதமாக நினைக்காமல் உயிருள்ள ஜீவனாக கருத வேண்டும். மனுவில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும். மனுவில்
தவறுகள் இருந்தால் திருத்தி வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் தொகை பெற்று வாழவேண்டும் என்ற ஆசையுடன் வந்துள்ள மக்களை அதிகாரிகள் கைவிட்டு விடக்கூடாது. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். குடும்பத்தினர் ஆதரவு இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளை காரணம் காட்டி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது. ஏழை மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஜெ., நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால், அதிகாரிகள் விசாரணை செய்து வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் உதவித்தொகை வழங்க வேண்டும். ரேஷன் கார்டு முக்கியமானதாக உள்ளதால், திருமணமானவர்கள் ஒவ்வொருவரும் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பெற்றோருடன் வசிக்கும் வீட்டு முகவரியை கொடுத்தால் நிராகரித்து விடுகின்றனர். நிறைய வீட்டில் பெற்றோரும் மகனும் தனித்தனியாக சமைக்கின்றனர். அதனால் திருமணமானவர்கள் விண்ணப்பிக்கும் போது, பெற்றோர் ரேஷன் கார்டில் பெயர் நீக்கியிருந்தாலே புதிய ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.
ஆக., 20ம் தேதி தொண்டாமுத்தூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் மனுநீதிநாள் முகாமில், இன்று பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும்.


