/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் ஒரு கிலோ தங்க நகையுடன் "எஸ்கேப்'கோவையில் ஒரு கிலோ தங்க நகையுடன் "எஸ்கேப்'
கோவையில் ஒரு கிலோ தங்க நகையுடன் "எஸ்கேப்'
கோவையில் ஒரு கிலோ தங்க நகையுடன் "எஸ்கேப்'
கோவையில் ஒரு கிலோ தங்க நகையுடன் "எஸ்கேப்'
ADDED : ஜூலை 28, 2011 10:03 PM
கோவை : கோவை,வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர்; நகை கடை உரிமையாளர்.
இவரிடம் தில்லைநகரைச் சேர்ந்த நகைபட்டறை உரிமையாளர்கள் ஆனந்தகுமார்(34), சுரேந்திரன்(32) தங்கத்தை வாங்கி, நகைகளாக வடிவமைத்து கொடுத்து வந்தனர். கடந்த மே 11ம் தேதி, இவர்களிடம் ஒரு கிலோ 849 கிராம் தங்கத்தை கொடுத்து, குறிப்பிட்ட தேதிக்குள் நகைகளாக வடிவமைத்து தரும்படி ரவிசங்கர் கேட்டுக் கொண்டார். கடந்த 22 ம் தேதி 853 கிராம் அளவுக்கு நகைகளை வடிவமைத்து கொடுத்த ஆனந்தகுமார், சுரேந்திரன் தங்கள் பட்டறைகளை மூடிவிட்டு ஒரு கிலோ நகையுடன் தலைமறைவாகி விட்டனர். ரவிசங்கர், செல்வபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ஆனந்தகுமார், சுரேந்திரனை தேடி வருகின்றனர்.


