/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மேயர் அலுவலகம் முற்றுகையிடப்படும் : மனிதநேய மக்கள் கட்சி "ஆவேசம்'மேயர் அலுவலகம் முற்றுகையிடப்படும் : மனிதநேய மக்கள் கட்சி "ஆவேசம்'
மேயர் அலுவலகம் முற்றுகையிடப்படும் : மனிதநேய மக்கள் கட்சி "ஆவேசம்'
மேயர் அலுவலகம் முற்றுகையிடப்படும் : மனிதநேய மக்கள் கட்சி "ஆவேசம்'
மேயர் அலுவலகம் முற்றுகையிடப்படும் : மனிதநேய மக்கள் கட்சி "ஆவேசம்'
ADDED : ஆக 04, 2011 01:28 AM
திருநெல்வேலி : மேலப்பாளையத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் மேயர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடக்கும் என மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகக்குழுக்கூட்டம் மாவட்டச்செயலாளர் ரசூல்மைதீன் தலைமையில் நடந்தது.
பகுதி தலைவர் காஜா, செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் ரப்பானி முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் அப்துல்அஜீஸ், துணைச்செயலாளர் பாதுஷா, தொண்டர் அணி செயலாளர் பத்ரூத்தின், மாணவர் அணி செயலாளர் அஜீஸ், மருத்துவ அணி செயலாளர் அப்துல்கப்பார், இளைஞரணி செயலாளர் மைதீன் உட்பட பலர் பேசினர்.மேலப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் மேயர் அலுவலகத்தை முற்றுகையிடுவது, காஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்துவது, மேலப்பாளையத்தில் இருந்து நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டுக்கு சர்குலர் பஸ்கள் இயக்குவது, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு போலீசார் உடனே தடையில்லா சான்று வழங்குவது, புனித ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பது, நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் குடிநீர், கழிப்பிட வசதிகள் அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


