/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பைக்குகள் மோதிய விபத்தில் கான்ட்ராக்டர் பலிபைக்குகள் மோதிய விபத்தில் கான்ட்ராக்டர் பலி
பைக்குகள் மோதிய விபத்தில் கான்ட்ராக்டர் பலி
பைக்குகள் மோதிய விபத்தில் கான்ட்ராக்டர் பலி
பைக்குகள் மோதிய விபத்தில் கான்ட்ராக்டர் பலி
ADDED : ஆக 01, 2011 02:28 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் கான்ட்ராக்டர் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; முத்தையாபுரம் சுந்தர்நகரை சேர்ந்தவர் ரேணுகுமார்(45) கான்ட்ராக்டர் ஆவார். இவர் நேற்று பைக்கில் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். துத்துக்குடியில் பணியை முடித்துவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தார். பைக் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு பாலம் அருகே சென்றபோது அந்த ரோட்டின் வழியாக வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ரேணுகுமார் பரிதாபமாக இறந்தார். மற்றொரு பைக்கில் வந்த எட்டயபுரம் கீழவாசல் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன்(22) படுகாயம் அடைந்தார். இறந்து போன ரேணுகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த கதிரேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


