ADDED : ஆக 22, 2011 10:59 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், நடந்த தேசிய அளவிலான யோகாசன போட்டியில் கேசவ் வித்யா மந்திர் மழலையர் பள்ளி மாணவர்கள் அதிக பரிசுகளை தட்டி சென்றனர்.
பொள்ளாச்சியில், வாமதேவா யோகாசனா ஆராய்ச்சி மையம் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில், ஜூனியர் பிரிவில் பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மழலையர் மற்றும் நர்சரி பள்ளி மாணவிகள் காயத்ரி ராஜேஸ்வரி, தன்யா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், துர்காபிரசாத், ராஜேஷ், நளினாஸ்ரீ ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் தெய்வநாயகி உட்பட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.