ADDED : செப் 26, 2011 10:07 PM
சாத்தூர்:சத்திரபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மனைவி மாரீஸ்வரி,28.
இவர் தங்கை மாரியப்பன் மனைவி கார்த்திகா,21. இருவரும், கார்த்திகாவின் மாமனார் முருகனிடம், மைத்துனன் வைரமுத்து பொருட்கள் வைத்திருக்கும் குடிசையை காலி செய்து கொடுத்தால், கார்த்திகாவும்,மாரியப்பனும் வசித்துக்கொள்வார்கள் என கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த வைரமுத்து,27, சரவணக்குமார், 28, மாரியம்மாள்,48,நாகம்மாள்,55, வேல்தாய்,30, ஆகியோர் தாக்கியதில் கர்ப்பிணியான கார்த்திகா மாரீஸ்வரி காயமடைந்தனர். சாத்தூர் தாலுகா போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


