/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வீடு தேடி சென்று குறைகளை தீர்ப்பேன் : தே.மு.தி.க., வேட்பாளர்வீடு தேடி சென்று குறைகளை தீர்ப்பேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
வீடு தேடி சென்று குறைகளை தீர்ப்பேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
வீடு தேடி சென்று குறைகளை தீர்ப்பேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
வீடு தேடி சென்று குறைகளை தீர்ப்பேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
ADDED : அக் 08, 2011 11:14 PM
காரைக்குடி : நான் வெற்றி பெற்றால், வார்டு மக்களின் வீடு தேடி சென்று குறைகளை தீர்ப்பேன் என, காரைக்குடி நகராட்சி 18வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர் வி.வடிவேல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு என்னை வேட்பாளராக நிறுத்திய தலைவர் விஜயகாந்திற்கு நன்றி. வார்டு மக்களின் பிரச்னைகளை நன்கு அறிந்தவன். மக்களின் ஆசியோடு கவுன்சிலர் பதவிக்கு போட்டிடுகிறேன். நான் வெற்றி பெற்றால், மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். கழிவு நீர் செல்வதற்கு வடிகால் வசதி அமைத்து கொடுப்பேன். கொசுக்களால் நோய் பரவாமல் தடுக்க வாரம் இரு முறை மருந்து தெளிக்கப்படும். அனைத்து வீதிகளிலும் குப்பை தொட்டிகள் வைத்து, சுகாதாரம் பராமரிக்கப்படும். குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்படும். அலுவலகங்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் ரேஷன் கடைக்கு செல்ல முடியாதவர்கள் தங்களது குடும்ப அட்டையை, எனது இல்லத்தில் கொடுத்துவிட்டு சென்றால் உங்கள் இல்லம் தேடி உரிய ரேஷன் பொருட்கள் கொண்டு வந்து சேர்ப்பேன். ஒரு போன் செய்தால் போதும், வீடு தேடி வந்து குறைகளை தீர்த்து வைப்பேன்'', என்றார்.


