Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"பல்லுயிர் பரவல்' முதுகலை பட்டப்படிப்பு

"பல்லுயிர் பரவல்' முதுகலை பட்டப்படிப்பு

"பல்லுயிர் பரவல்' முதுகலை பட்டப்படிப்பு

"பல்லுயிர் பரவல்' முதுகலை பட்டப்படிப்பு

ADDED : செப் 10, 2011 03:27 AM


Google News

திருச்சி:பாரதிதாசன் பல்கலை நடத்தும் பல்லுயிர் பரவல் மற்றும் எதிர்கால வாய்ப்பு எனும் முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராமசாமி வெளியிட்ட அறிக்கை:திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலை வரும் செப்டம்பர் 12ம் தேதி முதல் பல்லுயிர் பரவல் மற்றும் பல்லுயிர் எதிர்கால வாய்ப்பு எனும் முதுகலை பட்டப்படிப்பினை தாவர அறிவியல் துறையில் துவங்கவுள்ளது.

இது டில்லியில் உள்ள பல்கலை மானியக்குழுவால், 'புதிது புனைதல்' என்ற திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மேற்படிப்பு.இப்படிப்பானது இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க உதவும்.இந்த இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பில் சேருவதுக்கு தகுதியாக உயிர் அறிவியலில் ஒரு பட்டப்படிப்பு (தாவரவியல் அல்லது விலங்கியல் அல்லது வேதியியல் அல்லது உயிர்நுட்பவியல் அல்லது உயிர் வேதியியல் அல்லது தாவர உயிரியல் மற்றும் உயிர்நுட்பவியல் அல்லது விலங்கு உயிரியல் மற்றும் உயிர்நுட்பவியல் அல்லது நுண்ணுரியல் அல்லது உயிர் அறிவியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் அல்லது காட்டியல்) இருக்க வேண்டும்.இப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு பணிகளில் சேருவதுக்கு வாய்ப்புள்ளது. தாவர மூலிகை பொருட்கள், தாவர மருந்து பொருட்கள், உணவூட்ட பொருட்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிற்சாலைகள், தேசிய மற்றும் பன்னாட்டு படிப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள்.மத்திய மற்றும் மாநில அரசுகள், பன்னாட்டு தொழிற்சாலைகள், பல்கலை, கல்லூரிகள், தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனங்கள், மூலிகை வளர்ப்பு பண்ணைகள், மற்றும் அவற்றைப் பெருக்கும் வங்கிகள், தரக்கட்டுப்பாடு மையங்கள் தாவர வேதியியல் ஆராய்ச்சி கூடங்கள்.தாவர உள்ளமைப்பு ஆராய்ச்சி கூடங்கள், எதிர்பஅபு நோய் தொழிற்சாலைகள், தாவர மருந்து கண்டுபிடிப்பு மற்றும் வளர்ப்பு பிரிவுகள், மருந்து நிலைப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பிரிவுகள், மூலக்கூறு உயிரியல் உயர்வகை தொழிற்சாலைகள்.மரபு பொறியியல் மற்றும் நுண்பெருக்கம் மூலம் இரண்டாவது வளர்சிதை பொருட்கள் பெருக்கும் ஆராய்ச்சி கூடங்கள், மருந்தியல் சோதனைக்கூடங்கள், மருந்து விற்பனை தொழிலகங்கள், காப்புரிமை கழகங்கள் போன்றவற்றில் பணி பெறுவதுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 12ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான விண்ணப்ப கட்டணத்துடன் பேராசிரியர் விசுவநாதன், ஒருங்கிணைப்பாளர், சித்த-ஆயுர்வேதா மருந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு மையம், தாவர அறிவியல் துறை, பாரதிதாசன் பல்கலை, திருச்சி 620024, என்ற முகவரிக்கு அனுப்பவும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us