Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/"கதர்' விற்பனை இலக்கை அடைய ரூ. 56 லட்சம்! அரசு ஊழியருக்கு கலெக்டர் அழைப்பு

"கதர்' விற்பனை இலக்கை அடைய ரூ. 56 லட்சம்! அரசு ஊழியருக்கு கலெக்டர் அழைப்பு

"கதர்' விற்பனை இலக்கை அடைய ரூ. 56 லட்சம்! அரசு ஊழியருக்கு கலெக்டர் அழைப்பு

"கதர்' விற்பனை இலக்கை அடைய ரூ. 56 லட்சம்! அரசு ஊழியருக்கு கலெக்டர் அழைப்பு

ADDED : அக் 03, 2011 03:04 AM


Google News

தஞ்சாவூர்: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கதர் வாங்கி, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவவேண்டும்,'' என தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சை ராஜராஜன் வணிக வளாகத்தில் உள்ள காந்திகிராஃப்ட்டில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், காந்தியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து, முதல் விற்பனை துவக்கி வைத்தார். விழாவில் கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: கதர் மற்றும் காந்தியக் கொள்ளைகள் மக்கள் அனைவரும் பின்பற்றவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கதர் வாங்கி, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவவேண்டும். நடப்பாண்டுக்கான விற்பனை இலக்கு 56 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள காதிகிராஃப்ட்டுகள், பஞ்., யூனியன்களில் உள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில், கதர், பட்டு, பாலிவஸ்திரா மற்றும் உல்லன் ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தள்ளுபடி விற்பனை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஈ.வே.ரா., காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, செப்., 1ம் தேதி முதல் அக்., 25ம் தேதி வரை சிறப்புத்தள்ளுபடி விற்பனை நடக்கிறது.

கதர் பருத்திக்கு 30 சதவீதமும், பட்டுக்கு (கடன்) 20 சதவீதமும், பட்டுக்கு (ரொக்கம்) 20 சதவீதமும், பாலியஸ்டர் 30 சதவீதமும், உல்லனுக்கு 20 சதவீதமும் சிறப்புத்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடன் முறையிலும், பொதுமக்களுக்கு ரொக்கத்துக்கும் கதர் துணிகள் விற்பனை செய்யப்படுகிறது.

அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்கள் வாங்கி பயனடைய வேண்டும். சுத்தமான இலவசம் பஞ்சினால் தயாரிக்கப்பட்ட மெத்தைகள் மற்றும் தலையணைகளும் விற்பனை செய்யப்படுகிறது. பஞ்., யூனியன் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும், கதர் விற்பனை இலக்கு 56 லட்ச ரூபாயை எட்ட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கதர் கிராமத்தொழில்கள் உதவி இயக்குனர் சுதர்சனம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, தஞ்சை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலர் கிரிராஜன் செய்திருந்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us