ADDED : ஜூலை 28, 2011 01:24 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் புதுப்பட சிடி விற்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டியில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் ரோட்டிலுள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து கடையிலிருந்த புதுப்பட சிடிக்கள் சுமார் 18ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புதுப்பட சிடி விற்றதாக பசுவந்தனை கீழத்தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ராஜா (23) என்பவரை கைது செய்து கோவில்பட்டி ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொட ர்ந்து இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


