/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கவுன்சிலர்கள் விதிமுறை மீறுவதாக நகராட்சி அலுவலர்கள்...புலம்பல்கவுன்சிலர்கள் விதிமுறை மீறுவதாக நகராட்சி அலுவலர்கள்...புலம்பல்
கவுன்சிலர்கள் விதிமுறை மீறுவதாக நகராட்சி அலுவலர்கள்...புலம்பல்
கவுன்சிலர்கள் விதிமுறை மீறுவதாக நகராட்சி அலுவலர்கள்...புலம்பல்
கவுன்சிலர்கள் விதிமுறை மீறுவதாக நகராட்சி அலுவலர்கள்...புலம்பல்
ADDED : செப் 08, 2011 10:30 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்காக விதிமுறை மீறும் கவுன்சிலர்களின் செயல்களால், அலுவலர்கள் விரக்தியில் உள்ளனர்.
நேரடியாக தரும் புகார்களை கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் புலம்புகின்றனர். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்போதிலிருந்தே பொது மக்களின் ஆதரவை பெறுவதற்காக கவுன்சிலர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். மக்கள் பணி செய்வதாக கூறி, நகராட்சியில் விதிகளை மீறி சில பணிகளை செய்வதற்கு அலுவலர்களை நிர்ப்பந்தம் செய்கின்றனர். அலுவலர்கள், 'கமிஷனர் சொல்வதை கேட்பதா, கவுன்சிலர் சொல்வதை கேட்பதா என்றே தெரியவில்லை. மிகுந்த சிக்கலை ஏற்படுத்துகின்றனர்' என புலம்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பதவி காலம் முடியும் தருவாயில் உள்ளதால் தெருவிளக்கு, கழிவுநீர் சுத்தம் போன்றவை குறித்து கவுன்சிலர்களே புகார் தெரிவிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் அதிகாரிகளை பார்க்க முடியாத நிலையில் தெருவிளக்கு, வரி வசூல், கழிவுநீர் கால்வாய் தொடர்பான பிரச்னைகளை யாரிடம் சொல்வது என்றே தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரத்தில் மட்டும் மக்களின் புகார்களை கேட்பதற்கே ஆளில்லை. குறைகளை களைய நகராட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.


