வன்முறையை தூண்டும் பேச்சு : டி.ஆர்.எஸ்., தலைவர் மீது வழக்கு
வன்முறையை தூண்டும் பேச்சு : டி.ஆர்.எஸ்., தலைவர் மீது வழக்கு
வன்முறையை தூண்டும் பேச்சு : டி.ஆர்.எஸ்., தலைவர் மீது வழக்கு
ADDED : அக் 12, 2011 12:22 AM

ஐதராபாத் : வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி, அங்கு போராட்டம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், கூட்டம் ஒன்றில் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா போராட்டத்திற்கு ஆதரவாக, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யாத எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளை தாக்க வேண்டும் என பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சைபாபாத் போலீசார், சந்திரசேகர ராவ் மீது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, வழக்கு பதிவு செய்துள்ளனர்.


