சோனியா, ராகுல் தொகுதிகளில் ஹசாரே குழு கருத்துக்கணிப்பு
சோனியா, ராகுல் தொகுதிகளில் ஹசாரே குழு கருத்துக்கணிப்பு
சோனியா, ராகுல் தொகுதிகளில் ஹசாரே குழு கருத்துக்கணிப்பு
ADDED : அக் 03, 2011 01:31 AM
புதுடில்லி :சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோரது தொகுதிகளில், ஜன் லோக்பால் மசோதா குறித்து, கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றனர்.பிரதமர் உள்ளிட்டோரை விசாரிக்க வழி செய்யும் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் படி, அன்னா ஹசாரே வற்புறுத்தி வருகிறார்.
இவரது குழுவைச் சேர்ந்தவர்கள், இந்த மசோதா குறித்து, 12 தொகுதிகளில் நேற்று முதல் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றனர்.லோக்பால் மசோதா குறித்த பார்லிமென்ட் நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து எம்.பி.க்கள் தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.,தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தொகுதிகளிலும், நேற்று இந்த கருத்துக்கணிப்பு துவங்கியது.


