Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

ADDED : செப் 25, 2011 01:10 AM


Google News

பல்லடம் :பல்லடத்தில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நியாயமான கூலி உயர்வு கோரி, இரண்டாவது நாளாக நேற்றும், குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையார்கள் நூறு சதவீத கூலி உயர்வு கோரி, கடந்த 30ம்தேதி முதல் தங்கள் இரண்டு லட்சம் விசைத்தறிகளை நிறுத்திவிட்டு, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூலி உயர்வு தொடர்பாக விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே எட்டுமுறை நடந்த பேச்சில், இடைக்கால கூலி உயர்வாக 25 சதவீதம் கூலி உயர்வு அளிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர்; விசைத்தறி உரிமையாளர்கள் இதனை ஏற்கவில்லை.நியாயமான கூலி உயர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர, ஐந்துநாட்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்தனர்; நேற்றுமுன்தினம் முதல் பல்லடம், சோமனூர், தெக்கலூர், அவிநாசி, மங்கலம் ஆகிய 5 இடங்களில் குடும்பத்துடன் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பல்லடத்தில் கொசவம்பாளையம்ரோட்டில் விசைத்தறியாளர்கள் நேற்று இரண்டாவது நாளாக தலைவர் வேலுச்சாமி, செயலாளர் அப்புக்குட்டி, பொருளா ளர் கந்தசாமி, நிர்வாகிகள் பாலு, தங்கவேல் தலைமையில்குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.ம.தி.மு.க., மாநில அவைத் தலைவர் துரைசாமி, கொ.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ், உ.உ.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவித்து பேசினர்.விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பல்லடம் பகுதியில் மட்டும் கடந்த 25 நாளில் 235 கோடி ரூபாய் மதிப்புள்ள துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாவும்1.25 லட்சம் பேர் தற்காலிகமாக வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us