/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குடியிருப்பு பகுதிக்குள் பிளாஸ்டிக் குடோன்:பேராபத்துக்கு முன் நடவடிக்கை அவசியம்குடியிருப்பு பகுதிக்குள் பிளாஸ்டிக் குடோன்:பேராபத்துக்கு முன் நடவடிக்கை அவசியம்
குடியிருப்பு பகுதிக்குள் பிளாஸ்டிக் குடோன்:பேராபத்துக்கு முன் நடவடிக்கை அவசியம்
குடியிருப்பு பகுதிக்குள் பிளாஸ்டிக் குடோன்:பேராபத்துக்கு முன் நடவடிக்கை அவசியம்
குடியிருப்பு பகுதிக்குள் பிளாஸ்டிக் குடோன்:பேராபத்துக்கு முன் நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூலை 27, 2011 01:06 AM
ஈரோடு : ஈரோடு சங்கு நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் செயல்படும், பிளாஸ்டிக் குடோனை அகற்ற, மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் இருந்து குறிப்பிட்ட தொலைவில்தான், பிளாஸ்டிக் குடோன்கள் அமைக்க வேண்டும் என்பது, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி. ஈரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குடோன்கள் செயல்படுகின்றன. ஈரோடு சங்குநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக, எட்டுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 10 டன்னுக்கும் மேலான, பிளாஸ்டிக் பொருட்கள் உடைக்கப்பட்டு, மாற்று பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்குள் செயல்படும் பிளாஸ்டிக் பொருள் குடோனால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பேராபத்துக்கு முன் பிளாஸ்டிக் குடோனை அகற்றிட, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்குநகர் பகுதி மக்கள் கூறியதாவது: சேலம் சீலநாயக்கன்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய பிளாஸ்டிக் குடோனில், சமீபத்தில் தீப்பிடித்தது. ஐந்து மணி நேரம் போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டாலும், அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறால் பாதிப்படைந்தனர். இதுபோல், ஈரோடு சங்கு நகர் பகுதியில் அனுமதியின்றி பிளாஸ்டிக் குடோன்கள் இயங்கி வருகின்றன. 30 டன்னுக்கும் மேல் பிளாஸ்டிக் பொருட்களும், கழிவு பொருட்களும், இவற்றில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கேயே அவற்றை சிறு துண்டுகளாக்கி, பிளாஸ்டிக் தூளாக்கி, பெரிய ஆலைகளுக்கு இவற்றை விற்கின்றனர். இதனால், காசு மாசடைகிறது. தீ விபத்து ஏற்பட்டால், நெருக்கமாகவுள்ள குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்படும். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


