உரங்களில் மணல் கலப்பு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி
உரங்களில் மணல் கலப்பு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி
உரங்களில் மணல் கலப்பு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, மணல் கலந்த கலப்பட உரங்கள் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதைப் பார்த்து விக்டர் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஐம்பது கிலோ மூட்டையில் 25 கிலோ மணல் இருந்ததால், உர மூட்டைகளை எடுத்துச் சென்று கடைக்காரரிடம் முறையிட்டனர். அதற்கு போதிய விளக்கம் அளிக்காமல், விவசாயிகளை திருப்பி அனுப்பி விட்டனர்.
இது குறித்து விவசாயி விக்டர் கூறுகையில்,'கடந்த 18 ஆண்டுகளாக பயிர்களுக்குத் தேவையான உரங்களை கூத்தனூரில் வாங்கி வருகிறோம். வழக்கமாக உரங்களை நிலத்தில் விசிறிவிடுவோம். நேற்று கலப்பு உரத்தை தண்ணீரில் கரைத்து தெளிக்க முயன்றபோது தான், உரத்தில் மணல் அதிகளவில் கலப்படமாக சேர்க்கப்பட்டுள்ளது தெரிந்தது. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளோம்' என்றார்.
இது குறித்து, வேளாண் உதவி இயக்குனர் ரவீந்திரன் கூறுகையில்,'கலப்பு உரத்தில் சுண்ணாம்பு உள்ளிட்ட சில கலவைகள் கலப்பதுண்டு. அளவுக்கு அதிகமாக கலவைகள் கலந்திருக்கக் கூடாது; அது தவறு. அவ்வாறு உரங்களில் கலப்படம் இருப்பது உறுதியானால், விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


