ADDED : ஆக 21, 2011 11:53 PM
அன்னூர் : கோவை மாவட்ட அமைப்பு சாரா பொதுத்தொழிலாளர் சங்கம்
(ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
வழங்கும் நிகழ்ச்சி, அன்னூரில் நடந்தது.
சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல்
தலைமை வகித்து பேசினார். இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி
பேசுகையில், ''அன்னூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, தாலுகா அலுவலகம் அமைக்க
கோரி போராட்டம் நடத்த உள்ளோம்,'' என்றார். விசைத்தறி மற்றும் கட்டுமான
தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் 50 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, துணை செயலாளர் சுப்பையன்
உள்பட பலர் பங்கேற்றனர்.


