Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அசோக்நகர் - கோயம்பேடு மேம்பால பணிகள் தாமதம்

அசோக்நகர் - கோயம்பேடு மேம்பால பணிகள் தாமதம்

அசோக்நகர் - கோயம்பேடு மேம்பால பணிகள் தாமதம்

அசோக்நகர் - கோயம்பேடு மேம்பால பணிகள் தாமதம்

ADDED : செப் 07, 2011 11:41 PM


Google News

சென்னை : வடபழனி உள்வட்டச்சாலை - என்.எஸ்கே., சாலை (ஆற்காடு சாலை) சந்திப்பில் மேம்பாலம் அமைக்க, நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால், அசோக்நகர் -கோயம்பேடு சாலைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தேக்கமடைந்துள்ளன.அசோக்நகர் -கோயம்பேடுக்கு செல்லும் வாகனங்களும்,கோடம்பாக்கம் -கேகே.நகர் செல்லும் வாகனங்களும் சிக்னலுக்காக பல மணிநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. இங்கு தினமும் ஏற்படும்போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சிக்னலுக்காக வாகனங்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், வடபழனி உள்வட்டச்சாலை - என்.எஸ்.கே.,சாலை (ஆற்காடு சாலை) சந்திப்பில் புதிதாக சாலைமேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.ரூ. 30 கோடி ஒதுக்கீடு:இதற்காக, கடந்த 2005ம் ஆண்டு, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்தது. சென்னை நகரில்வேறு எங்கும் இல்லாத வகையில், கீழ் பகுதியில் சாலை, நடுவில் சாலைமேம்பாலம், அதற்குமேல் மெட்ரோ ரயில் ஓடு பாதை ஆகியவை இந்த திட்டத்தில் பிரமாண்டமாக அமையவுள்ளது. சாலைமேம்பாலத்திற்குமேல் மெட்ரோ ரயில் ஓடு பாதை அமைவதால்,மேம்பாலம் கட்டுமானப் பணி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சாலைமேம்பாலம், சர்வீஸ் சாலைகள், நடைபாதை மற்றும் மழைநீர் கால்வாய் ஆகியவை அமைக்கத்தேவையான நிலத்தை கையகப்படுத்த 30கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் இடங்கள்கோடம்பாக்கம், சாலிகிராமம், புலியூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளன. இந்த மூன்று கிராமங்களும் கிண்டி- மாம்பலம், எழும்பூர் - நுங்கம்பாக்கம் ஆகிய வருவாய்த்துறை வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டில் வருகின்றன.மேலும், நிலம் எடுப்பு பணி விரைந்து முடிக்க பூந்தமல்லி சிறப்பு வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டார். ஆனால், ஆறு ஆண்டுகள் ஆகியும் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.வருவாய்துறை குளறுபடி: வடபழனி உள்வட்டச்சாலை (நூறடி சாலை) விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி, கடந்த 1982 - 1986ம் ஆண்டு வரை பணி நடந்தபோது, சாலை விரிவாக்கத்திற்கு நிலத்தை கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. இழப்பீடு பெற்றவர்களின் நிலத்தினை, மாநில நெடுஞ்சாலைத்துறை பெயருக்கு, வருவாய்த்துறையினர் பதிவேட்டில் மாற்றவில்லை.இதனால், இழப்பீட்டுத் தொகை பெற்றவர்களின் பெயரே பதிவேட்டில் தொடர்வதால் பல்வேறு குழப்பங்களுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஆளாகியுள்ளனர். இது போன்ற காரணங்களால், மேம்பால திட்டத்திற்காக ஆறு ஆண்டுகளாகியும் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கவில்லை.இது குறித்து பேசிய பூந்தமல்லி சிறப்பு தாசில்தார் (நிலம் எடுப்பு) மணி, ''வடபழனி உள்வட்டச்சாலை விரிவாக்கத்தில், கிண்டி - மாம்பலம் வருவாய்த்துறை வட்டாட்சியர் அலுவலகம் ஆவணங்களை சரிவர பராமரிக்கவில்லை. இதனால், அப்பிரச்னைகளை கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.



மேலும்,கேகே.நகர் -கோயம்பேடு சாலைமேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலைக்குதேவையான நிலத்திற்கு அரசு உத்தரவு எண்.15.2ன் படி, மூன்று கிராமங்களுக்கு நிலம் எடுப்பு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது, மறு அரசு உத்தரவு 15.1ன்படி, சாலிகிராமத்திற்கு மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு கிராமங்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்படும். இதன்பின் படிப்படியாக நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கும்'' என்றார்.இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறைகோட்ட பொறியாளர் சொக்கலிங்கம் கூறும்போது,'நிலம் கையகப்படுத்தும் இடத்தில் வெங்கீஸ்வரர்கோவில் சார்பில்கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றிருந்தனர். இதனால், காலதாமதம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம்தான் தடை உத்தரவு நீக்கப்பட்டது.மேலும், நிலம் கையகப்படுத்த அரசு உத்தரவு எண்.15.2ன்படி விளம்பரப்படுத்தப்பட்டது. ஏற்கனவே நூறடி சாலை செயல்பாட்டில் உள்ளது. நிலம் கையகப்படுத்த 30கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்கும்,' என்றார்.



ஜி.எத்திராஜுலு







      Our Apps Available On




      Dinamalar

      Follow us