625 பேர் வேட்பு மனுஇன்றுடன் நிறைவு
625 பேர் வேட்பு மனுஇன்றுடன் நிறைவு
625 பேர் வேட்பு மனுஇன்றுடன் நிறைவு
ADDED : செப் 29, 2011 01:16 AM
ஈரோடு: வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.உள்ளாட்சி தேர்தலில்
வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நேற்று மேயர் பதவிக்கு ஏழு பேரும், மாநகராட்சி கவுன்சிலருக்கு 64, நகராட்சி
கவுன்சிலருக்கு 14, 2ம் நிலை நகராட்சி கவுன்சிலருக்கு ஐந்து, டவுன்
பஞ்சாயத்து தலைவருக்கு 11, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 73, மாவட்ட
பஞ்சாயத்து கவுன்சிலருக்கு ஏழு, யூனியன் கவுன்சிலருக்கு 48, பஞ்சாயத்து
தலைவர் பதவிக்கு 78, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 318 வேட்பு மனு
என மொத்தம் 625 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர்.மாவட்ட அளவில் மொத்தமுள்ள
3,363 பதவிகளுக்கான தேர்தலில் நேற்று வரை 7,400 மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.நேற்று மனுத்தாக்கல் சற்று குறைந்து காணப்பட்டது. இன்று
இறுதி நாள் என்பதால் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் வேட்பு
மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.


