ADDED : ஆக 28, 2011 11:48 PM
கோவை : விஸ்வகர்ம அனைத்து தச்சர்கள் நல சங்கத்தின் முதலாமாண்டு துவக்க
விழா, சுந்தராபுரம் செங்கப்ப கோனார் கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவில் மாவட்ட தச்சர்கள் சங்க செயலாளர் கனகராஜ் வரவேற்றார். பேரூர்
ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்ட கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், விழாவை துவக்கி வைத்து
பேசுகையில்,''தச்சு ஊழியர்களுக்கு என தனி நல வாரியம் அமைந்தால், தச்சு
தொழிலை நம் பியுள்ள அனைவர் நலனும் மேம்படும். இது தச்சர்கள் நல சங்கத்தின்
முக்கிய கோரிக்கையாக உள்ளது. ''சங்கம் சார்பில் கோரப்பட்டுள்ள நலிவடைந்த
தச்சு ஊழியர்களுக்கு இலவச நலத்திட்டம்; குழந்தைகள் கல்வியை மேம்படுத்த
உதவிகள்; மருத்துவ மேன்மை; திருமணமாக பெண்களுக்கு உதவிகள்; உபகரணங்கள்
வாங்க வட்டியில்லா கடனுதவி, ஆகிய அனைத்து தேவைகள் குறித்தும் தமிழக
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார். இதில் சங்க தலைவர்
சுப்பிரமணியன், பொருளாளர் முருகன் மற்றும் பிற நிர்வாகிகள், உறுப்பினர்கள்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


