/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பணி நிரந்தரம் கோரி நீச்சல் குள பணியாளர்கள் முதல்வருக்கு மனுபணி நிரந்தரம் கோரி நீச்சல் குள பணியாளர்கள் முதல்வருக்கு மனு
பணி நிரந்தரம் கோரி நீச்சல் குள பணியாளர்கள் முதல்வருக்கு மனு
பணி நிரந்தரம் கோரி நீச்சல் குள பணியாளர்கள் முதல்வருக்கு மனு
பணி நிரந்தரம் கோரி நீச்சல் குள பணியாளர்கள் முதல்வருக்கு மனு
ADDED : ஆக 08, 2011 04:05 AM
கடலூர் : நீச்சல் குள பணியாளர்கள் மற்றும் குறியீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு நீச்சல் குள பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட மனு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை உட்பட 20 மாவட்டங்களில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர்.பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் குளத்திற்கு நான்கு உயிர் காப்பாளர்கள், ஒரு பம்ப் ஆர்ரோட்டர், தோட்ட பராமரிப்பு, துப்புரவாளர் என ஆறு பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதே போன்று தமிழகம் முழுவதும் 100 பேர் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் 2,000 முதல் 4375 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் உள்ள நீச்சல் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியமாக 4,800-10,000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் நீச்சல் குளத்தில் மணி கணக்கில் பயிற்சி பெறுவோருக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மாத கட்டணம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பொது மக்கள் பயிற்சி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மணிக் கணக்கில் பயிற்சி பெறும் கட்டணமுறைய மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


