/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பட்டணம்காத்தான் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு காவிரி குடிநீர்பட்டணம்காத்தான் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு காவிரி குடிநீர்
பட்டணம்காத்தான் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு காவிரி குடிநீர்
பட்டணம்காத்தான் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு காவிரி குடிநீர்
பட்டணம்காத்தான் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு காவிரி குடிநீர்
ADDED : அக் 07, 2011 10:59 PM
ராமநாதபுரம் : ''பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில், வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்படும்,'' என, அந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சித்ரா மருது கூறினார்.
பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பூட்டு சாவி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்த அவர் கூறியதாவது: நான் வெற்றி பெற்றால், பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் வீடுகள்தோறும், காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்படும். பட்டணம்காத்தான் ஊராட்சியை, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்திலேயே முன்மாதிரியான ஊராட்சியாக மாற்றுவேன். ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்றால், அவர்களுக்கு எனது சொந்த பணத்திலிருந்து, பரிசுகள் வழங்கப்படும். கடந்த காலங்களில் ஊராட்சி சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. நான் வெற்றி பெற்றால், முழுசுகாதாரம் பெற்ற ஊராட்சியாக, மாநிலம் முழுவதும் பேசும் வகையில் அமைப்பேன். வீட்டு வசதி வாரிய 'ஏ, பி, சி, டி, இ' பிளாக்குகளில் உள்ள குப்பைகள், கழிவுநீர் தினந்தோறும் அகற்றப்படும். ஒருங்கிணைந்த சிறுவர் பூங்கா செயல்படுத்தப்படும். பெரியோர்களுக்கு நடைபாதை பூங்காவும் அமைக்கப்படும். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க இரவு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். சேதுபதி நகர் பகுதியில் இரவில் மின் விளக்குகள் தொடர்ச்சியாக, எரியும் வகையில் வழி செய்யப்படும்.ராமநாதபுரம் பெரிய மார்க்கெட்டுக்கு இணையாக, பாரதி நகரில் பெரிய மார்க்கெட் அமைக்கப்படும். கடந்த காலங்களில், இப்பகுதியில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதிப்பட்டு வந்தனர். எனக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், மழை நீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வாக, நடவடிக்கை எடுப்பேன், என்றார்.


