/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கந்துவட்டியில் சிக்கி தவிக்கும்மக்களை மீட்க நடவடிக்கைகந்துவட்டியில் சிக்கி தவிக்கும்மக்களை மீட்க நடவடிக்கை
கந்துவட்டியில் சிக்கி தவிக்கும்மக்களை மீட்க நடவடிக்கை
கந்துவட்டியில் சிக்கி தவிக்கும்மக்களை மீட்க நடவடிக்கை
கந்துவட்டியில் சிக்கி தவிக்கும்மக்களை மீட்க நடவடிக்கை
ADDED : அக் 07, 2011 12:47 AM
குன்னூர் : கந்து வட்டியில் சிக்கியுள்ள நீலகிரி அரசு ஊழியர்கள் பலர்,
மாநில முதல்வருக்கு மனு அனுப்பியதன் விளைவாக, சம்மந்தப்பட்ட
வட்டிக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறை தயாராகி வருகிறது.
குன்னூர் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை, வெலிங்டன் ராணுவ முகாமில்
பணியாற்றும் அரசு ஊழியர்களில் 100க்கணக்கானோர் கந்துவட்டியில்
சிக்கியுள்ளனர். வாங்கிய கடனுக்கு மாதந்தோறும் பெரும் தொகையை வட்டியாக
செலுத்தி, வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் தங்களின் 'ஏடிஎம்' கார்டுகளை அடகு
வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பலர் மாநில
முதல்வருக்கு மனு அனுப்பினர். விளைவாக, சம்மந்தப்பட்ட வட்டிக்காரர் மீது
கைது, விசாரணை உட்பட சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அனுமதி
கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. புகார்தாரர்கள் தங்கள் புகாரில் உள்ள
உண்மையை நிரூபிக்கும் வகையிலான மனுவை தயாரித்து போலீசாரிடம் வழங்க
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விரைவில், சம்மந்தப்பட்ட வட்டிக்காரர் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


