ADDED : ஜூலை 15, 2011 10:11 AM
திருநெல்வேலி: ரேஷன் கடையில் சில மாதங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படாததைக் கண்டித்து, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில், கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்பது பெண்களின் குற்றச்சாட்டு. இதையடுத்து கொதிப்படைந்த பெண்கள், நெல்லை திருச்செந்தூர் ரோட்டில் போலீஸ் கண்ட்ரோல் ரூம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


