சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'

பெய்ரூட் : 'சிரியா அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக, இதுவரை கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், மூன்றாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்' என, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள், தங்கள் இணையதளத்தில் மேலும் கூறியிருப்பதாவது:அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, போராடி வரும் கிளர்ச்சியாளர்களை, ராணுவத்தினர் கடுமையான முறையில், கையாண்டு வருகின்றனர். அமைதியாகப் போராடுவோரைக் கூட, வீண்பழி சுமத்தி மிருகத்தனமாக நடத்துகின்றனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டும், அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என, கிளர்ச்சியாளர்கள் மாயமாகி வருகின்றனர். இவ்வாறு, இதுவரை 2 ஆயிரத்து 918 கிளர்ச்சியாளர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இவ்வாறு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.


