Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவில் கலசங்கள் திருட்டு

கோவில் கலசங்கள் திருட்டு

கோவில் கலசங்கள் திருட்டு

கோவில் கலசங்கள் திருட்டு

ADDED : ஆக 19, 2011 01:32 AM


Google News
வால்பாறை:வால்பாறை அருகே, கோவில் கலசங்கள் திருட்டு போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில், சமீபகாலமாக, கோவில் கலசங்கள் திருடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சோலையார், அய்யர்பாடி, வாட்டர்பால், கவர்க்கல், சின்னக்கல்லார் பகுதியில் உள்ள ஒரு

சில கோவில்களின் கலசங்கள், மர்ம நபர்களால் திருடப்பட்டன. வால்பாறை போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை, யாரையும் கைது செய்யவில்லை.

நேற்றுமுன்தினம், வால்பாறை அடுத்துள்ள காஞ்சமலை எஸ்டேட் வடக்குப்பிரிவில் உள்ள ஸ்ரீ சத்தி விநாயகர் கோவிலில், இரண்டு கலசங்கள் திருடப்பட்டன. எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தன்னாசி கொடுத்த புகாரின் படி, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us