/உள்ளூர் செய்திகள்/சேலம்/பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை துவக்கம்பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை துவக்கம்
ADDED : செப் 16, 2011 01:38 AM
சேலம்: சேலம் பூம்புகாரில், நேற்று கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
நவராத்திரியை முன்னிட்டு, சேலம் பூம்புகாரில், நேற்று கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை, கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கண்õட்சியில், களிமண் பொம்மைகளும், காகிதக்கூழ் பொம்மைகளும் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் புதிய வரவாக, விஷ்ணு துர்க்கை மற்றும் கோல்கத்தா வெல்கம் லேடி வந்துள்ளது. தவிர, விநாயகர் வாத்தியசெட், குபேர லட்சுமி செட், குபேர விநாயகர் செட், அறுபடை வீடு செட், கல்யாண செட், கோபியர் செட், அகத்தியர் செட், அஷ்டலட்சுமி செட், தசாவதாரம் செட், ராமர் செட், கிரிக்கெட் செட், பட்டிமன்றம் செட், கரகாட்டம் செட், ஆழ்வார் செட், சிவன் நால்வர் செட், பெருமாள் நால்வர் செட், அய்யப்பன் ஜனனம் செட், கச்சேரி செட், ஸ்ரீ ராகவேந்திரர் செட், மாப்பிள்ளை அழைப்பு செட், பொய்க்கால் குதிரை நடன செட், பார்க்செட், விவசாய செட், முப்பெருந்தேவியர் செட் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கொலு பொம்மைகள், 50 ரூபாய் முதல், 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில், 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உள்ளது. நிகழ்ச்சியில், பூம்புகார் விற்பனை மேலாளர் ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


