ADDED : ஆக 03, 2011 01:50 AM
பண்ருட்டி : பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச எலும்பு முறிவு ஆலோசனை
முகாம் நேற்று நடந்தது.
பண்ருட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை போரூர்
ராமச்சந்திரா மருத்துவக்கழகம் சார்பில் இலவச எலும்பு முறிவு ஆலோசனை
முகாம் சக்கரபாணி திருமண மண்டபத்தில் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர்
மதன்சந்த் தலைமை தாங்கினார். இயக்குனர் சந்திரசேகர், அறிவொளி, முன்னாள்
வட்டார வளமைய மேற்பார்வையா ளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
ரோட்டரி முன்னாள் பொருளாளர் ராஜகோ பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில்
மூடநீக்கியல் டாக்டர் கோபிநாத் தலைமையில் டாக்டர்கள் எலும்பு சிகிச்சை
குறித்து ஆலோச னைகள் வழங்கினர். இதில் 150க்கும் மேற்பட்ட நோயாளிகள்
பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.


