ADDED : ஜூலை 14, 2011 09:36 PM
மடத்துக்குளம் : தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் ரோட்டை
பராமரித்து தெருவிளக்குகளை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி குடியிருப்பு
பகுதியில் இருந்து கோவிலுக்கும், விவசாய நிலத்துக்கும் செல்ல கிராமச்சாலை
அமைக்கப்பட்டது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரோட்டின் இரண்டு
பக்கமும் மண்எடுத்து தார்ரோட்டில் கொட்டியதால் ரோடு மிகவும் மோசமான
நிலையில் உள்ளது. தெருவிளக்குகள் பராமரிக்கப் படாததால்
பக்தர்களும்,பொதுமக்களும் இருளில் தவித்து வருகின்றனர். ரோட்டின் இரண்டு
பக்கமும் முட்புதர்கள் வெட்டப்படாமல் வளர்ந்துள்ளதால் விஷஜந்துக்கள்
நடமாட்டம் அதிகளவு உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: தெருவிளக்குகள் மற்றும்
பராமரிக்கப் படாத நிலையிலுள்ள ரோடு குறித்து பல முறை ஊராட்சி
நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தும் எந்த விதமான மேல் நடவடிக்கையும்
இல்லை. மடத்துக்குளம் பி.டி.ஓ., இது குறித்து நேரில் ஆய்வு செய்து
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.


