Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

ADDED : ஜூலை 14, 2011 09:33 PM


Google News
வால்பாறை : வால்பாறையில் பருவ மழை தீவிரமாக பெய்துவரும் நிலையில் சோலையாறு அணையின் நீர் மட்டம் கடந்த இரண்டு நாளில் நான்கு அடி உயர்ந்துள்ளது.

வால்பாறையில் தற்போது தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சோலையாறு, காடம்பாறை, அப்பர்ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி காலை 116.60 அடியாக இருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்று காலை 120.03 அடியாக உயர்ந்தது. கடந்த இரண்டு நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,243 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து சோலையார் பவர் ஹவுஸ் 2 வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 671 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வால்பாறையில் நேற்று காலை 8.00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வால்பாறை- 24, சோலையாறு-27, மேல்நீராறு-52, கீழ்நீராறு- 35 .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us