/உள்ளூர் செய்திகள்/திருச்சி/அ.தி.மு.க., சார்பில் இப்ஃதார் விருந்துஅ.தி.மு.க., சார்பில் இப்ஃதார் விருந்து
அ.தி.மு.க., சார்பில் இப்ஃதார் விருந்து
அ.தி.மு.க., சார்பில் இப்ஃதார் விருந்து
அ.தி.மு.க., சார்பில் இப்ஃதார் விருந்து
ADDED : ஆக 27, 2011 11:54 PM
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ., வுமான மனோகரன் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பின்படி, திருச்சி பாலக்கரை மெயின்ரோடு, மீனாட்சி திருமண மண்டபத்தில், இன்று (28ம் தேதி) மாலை, இப்ஃதார் (நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் தலைமை வகிக்கிறார். கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி, எம்.பி.,குமார், அல்முகம்மதியா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி முகம்மது பஸீம் தாவுதி பேசுகின்றனர். திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர் மீரான் நன்றி கூறுகிறார்.


